காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல்கிறேன். இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. வழக்கு பற்றிய அனைத்தையும், கோர்ட்டு தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.