ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் நேற்று ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் இன்று அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண உள்ளனர். இதற்காக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை பார்க்க அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்துக்கு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தந்தனர். 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி கண்டுகளிக்கிறார். பிரதமர் மோடி வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.