Friday, June 2, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை- அதிபர் ஜோ பைடன் உறுதி

துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை- அதிபர் ஜோ பைடன் உறுதி

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைதொடர்ந்து சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சரியானவை அல்ல. சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து வருகிறோம். பென் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க இன்னும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நமது சமூகங்களைத் துண்டாக்குகிறது. இந்த தேசத்தின் ஆன்மாவை அழிக்கிறது. பள்ளிகளை சிறைகளாக மாறாமல் பாதுகாக்க இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து இரண்டு தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு ஏகே-47 இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஆயுதத் தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்புவிடுகிறேன். அரசு இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments