குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்கு இன்று முதல் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனுக்கு செல்லும் குடியரசுத்தலைவர் அங்கு சுபாஷ் சந்திரபோஸின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பிறகு, பிற்பகலில் ஜேராசங்கோ தாகுர்பாரி-ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திகிறார். மாலையில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். நாளை மறுநாள் பேலூர் மடத்திற்கு வருகை தர உள்ளார்.