Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கன்னியாகுமரி வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

கன்னியாகுமரி வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் வந்து இறங்கினார். கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் செல்கிறார். விவேகானந்தர் பாறையில் அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர் அவர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்கின்றனர். தொடர்ந்து அங்குள்ள தியான மண்டபத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறிது நேரம் அங்கு தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் கன்னியாகுமரி, விவேகானந்தபுரம் பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments