மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.