கேரளாவில் கடந்த மாதம் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கேரளா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்தது. கேரளாவில் இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.98-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.98.52 ஆகவும் உயர்ந்தது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.85 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.21 ஆகவும் விற்பனை ஆகிறது. இதனால் தமிழக எல்லையோரம் வசிக்கும் கேரள மக்கள், தமிழக பகுதிக்கு வந்து பெட்ரோல், டீசல் போட்டு செல்கிறார்கள்.