கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் டி.எஸ்.பி.தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களை இணைய தளம் வாயிலாக செலுத்தினர். பின்னர் சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க மாட்டோம் என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்னர் வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மொத்தம் 12 வாகனங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.