டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு அந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். விமானம் இறங்கியதும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.