கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், கடந்த 3 தினங்களாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் செயல் வீரர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். வட்டாரம் வாரியாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கு சென்று அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் அனுதாபிகளை சந்தித்து அவர்களுடன் நேரடியாக கலந்தாய்வு செய்தார். கிள்ளியூர் மேற்கு, மேல்புறம் கிழக்கு, மேல்புறம் மேற்கு, குழித்துறை நகரம் ஆகிய பகுதிகளில் நடந்த இந்த சுற்றுப்பயணத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர். அவற்றை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
அதுபோல் செயல் வீரர்கள் கூட்டங்களில் ஊர் பொது பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவற்றையும் போக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் தெரிவித்தார்.
மேலும், வருகின்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஏற்ப ஒற்றுமையுடன் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த சுற்றுப்பயண விவரங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள விஜய் வசந்த், இந்த சுற்றுப்பயணம் வெற்றி பெற உழைத்த வட்டார தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டு தெரிவித்ததார். வரும் தினங்களில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் செயல் வீரர்களை பஞ்சாயத்து வாரியாக சென்று சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.