Tuesday, June 6, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்பாராளுமன்றம்: வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியது

பாராளுமன்றம்: வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை, நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 133 மணி நேரத்துக்கு பதிலாக, வெறும் 45 மணி நேரம்தான் செயல்பட்டது. மாநிலங்களவை 130 மணி நேரத்துக்கு பதிலாக 31 மணி நேரம்தான் இயங்கியது. அதாவது, மக்களவை 34.28 சதவீத நேரமும், மாநிலங்களவை 24 சதவீத நேரமும் இயங்கி உள்ளது. இரு அவைகளிலும் அடிக்கடி கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் வெறும் 4 மணி 32 நிமிடங்களும், மாநிலங்களவையில் 1 மணி 55 நிமிடங்களும் மட்டும் கேள்வி நேரம் நடந்தது. மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் 14 மணி 45 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது. 145 எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மணி 44 நிமிட நேரம் விவாதம் நடந்துள்ளது. 143 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மக்களவையில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 29 கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments