தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக நடிகர் நானி சமூக வலைத்தளத்தின் வாயிலாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் எங்களுடைய உழைப்பு.. உங்களுடைய பரிசு.. சினிமாவின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.