தமிழகத்தில் இன்புளூ யன்சா எனப்படும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத் திலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது பள்ளிகளிலும் சிறப்பு குழுக்கள் மூலம் மாண வர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறார்கள். முதல் நாள் 2982 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. மாவட்டம் முழுவ தும் 2501 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது. 98 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.சளி பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ள 98 பேரில் 53 பேர் மாணவர்கள் ஆவார்கள். சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகளாகவே உள்ளனர். எனவே மாணவ-மாணவி கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். இன்று 3-வது நாளாக அங்கன்வாடி மையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீனாட்சி கூறுகையில், இன் புளூயன்சா பாதிப்பு வராமல் தடுக்க கொரோனா காலத்தில் கடைபிடிக் கப்பட்டது போன்று முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளநீர் பழங்கள் சாப்பிடலாம். காய்ச்சல் சளி பிரச்சனையில் இளநீர் சாப்பிட முடியவில்லை என்றால் அரிசி கஞ்சி வைத்து குடிக்க வேண்டும். கஞ்சியை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பருக வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். போதிய ஓய்வு அவசியம் தேவை. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.