Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்வடமாநில பெண் அடித்தும், கடித்தும் கொலை:

வடமாநில பெண் அடித்தும், கடித்தும் கொலை:

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்பு தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டளைக்குளம் பகுதியில் உள்ளது. பெண் அடித்துக்கொலை இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த வசந்தி பகாடியா (வயது 29) நேற்று காலை வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வசந்தி பகாடியா அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது கணவர் டெபுராய் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கைதான டெபுராய், மனைவியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கொலை செய்யப்பட்ட வசந்தி பகாடியா, எனது 3-வது மனைவி ஆவார். எனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்தபோது, அங்கு பணியாற்றிய எனது மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணமான அவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஆரல்வாய்மொழி அழைத்து வந்தேன். அவரை 2-வது திருமணம் செய்து கொண்டு இங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தேன். அப்போது நாங்குநேரி மகளிர் போலீசார் வந்து, அடுத்தவர் மனைவியை நீ எப்படி அழைத்து வந்தாய்? எனக் கேட்டு என்னுடன் இருந்த பெண்ணை பிரித்து அழைத்துச்சென்று விட்டனர்.

அதன்பிறகு எனக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், மீண்டும் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டேன். அங்கு திருமணமாகி 7 வயது மகன் சிவாவுடன் வசித்து வந்த வசந்தி பகாடியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 3-வது மனைவியாக்கி கொண்டு, ஆரல்வாய்மொழி அழைத்து வந்தேன். இங்கு செங்கல்சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தேன். இரவில் வேலை முடிந்ததும் நான் மது அருந்துவேன். வசந்திக்கும் அந்தப் பழக்கம் இருந்ததால் அவரும் என்னுடன் அமர்ந்து மது அருந்துவார். நான் வீட்டில் இருக்கும் போது, எனது மாநிலத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு செல்போனில் பேசுவேன்.

ஆனால் இதனை வசந்தி சந்தேகப்பட்டாள். நான், நாங்குநேரியில் இருக்கும் போது பழக்கமான பெண்ணுடன் தான் பேசுவதாக கூறி அடிக்கடி தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்ப வத்தன்று நான் மது வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். அதனை எனக்கு தெரியாமல் வசந்தி பகாடியா குடித்துவிட்டார். இது எனது ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது. குடிபோதையில் இருந்த நான், வசந்தியின் உடலில் பல இடங்களில் கடித்தேன். அவள் வலியால் கூச்சலிட்டதால், அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ேதன். பின்னர் நான் படுத்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது, வசந்தி பகாடியா சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது ரத்தம் தோய்ந்த ஆடையை மாற்றிவிட்டு, காயங்களில் திருநீறை பூசினேன். அதன்பிறகும் பயம் நீடித்ததால், செங்கல் சூளை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு போலீசில் புகார் செய்தார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments