Tuesday, September 26, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவாகவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவாகவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கிய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. 16,108 அரசு பள்ளிகளில் 40 லட்சத்து 22 ஆயிரத்து 324 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 26 லட்சம் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள். மாநில கொள்கை குழுவில் புதிதாக 2 நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அறிக்கை சமர்பித்த பின்னர் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

15-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடற்கல்வி துறைக்கு பாடம் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர்களுக்கு போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே தெரிவித்து உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுப்போம். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்குவதா? இல்லையா என்பது குறித்து புதிய கல்வி கொள்கை அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments