அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட ஈசாந்திமங்கலத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக புதிதாக கட்டி முடிக்கப்பட் டுள்ள குடியிருப்பு திறப்பு விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டு குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் புதிய குடியிருப்பு களில் கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி குடி யிருப்புகளை பார்வை யிட்டனர். மேலும் கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியபோது கூறியதாவது:- அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் பிரிவின் கீழ், ஈசாந்திமங்கலம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், தரை மற்றும் 3 தளங்களுடன் ரூ.6.36 கோடி செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி கட்டுமான பரப்பில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள் ளது. ஒரு குடியிருப்புக்கான மதிப்பீடு ரூ.9.94 லட்சம் ஆகும். இதில் ஒரு குடியிருப்புக்கான பயனாளி பங்களிப்பு தொகை ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஆகும். மேலும் இத்திட்டத்தில் தார்ச்சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்று வசதி, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு முறைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளால் குடியிருப்பு நலச்சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது.
குமரி மாவட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய விடற்ற குடும்பங்களுக்கு இக்குடி யிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். இக்குடி யிருப்புக்கான 64 பயனாளிகள் பட்டியலுக்கு வாரியத்தால் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவர் களில் பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தி யுள்ள 7 பயனாளி களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் 6 பயனாளிகளுக்கு குடியிருப் போருக்கான ஆணையினை வழங்கினர். பின்னர் புதிய குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினர். விழாவில் நிர்வாக பொறி யாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் ராஜகோபால், தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண் விளைபொருள் இயக்குனர் பூதலிங்கம், ஈசாந்திமங்கலம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.