கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தேவைகளுக்காக ஜே.சி.பி இயந்திரம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது. குளங்கள் தூர் வாருதல், விளையாட்டு மைதானங்களை சமன் செய்தல் என மக்களின் தேவைக்கு ஏற்ப தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் இந்த இயந்திரம் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. குளச்சல் பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அந்தோணியார் சிற்றாலயத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் செடி கொடிகள் அகற்றப்பட்டன. குளச்சல் நகர காங்கிரஸ் மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்தன. கவுன்சிலர் பிரிட்டோ, மீனவர் அணி மாவட்ட தலைவர் ஸ்டார்வின், துணைத் தலைவர் லாலின் மற்றும் பொதுமக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.