மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார். இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.