கேரள மாநிலம் தேலம்பாடியைச் சேர்ந்தவர் எல்சூர் முகமது என்ற முகமது (வயது 60). தொழிலாளியான இவர், 9 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆதூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, முகமது, மாம்பழம் மற்றும் நெல்லிக்காய்களை வாங்கி தருவதாக கூறி 9 வயது சிறுமியை ரப்பர் எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முகமது மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை காசர்கோடு கூடுதல் செசன்சு நீதிபதி மனோஜ் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட முகமதுவுக்கு 88 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டத்தவறினால், மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.