Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்ஒற்றையால்விளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது

ஒற்றையால்விளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது

கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளையில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருமுறை பாராயணமும், கணபதிஹோமமும், தீபாராதனையும், அதைத்தொடர்ந்து யானையை வைத்து பூஜையும், தீபாராதனையும், மதியம் சமபந்தி விருந்தும் நடந்தது. மாலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்து யானை மீது வைத்து கொண்டு வரும் தீர்த்த சங்கரகரணம் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பூஜை, தனபூஜை, சமபந்தி விருந்து, மகா தீபாராதனையும் நடந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு விநாயகர் பூஜை, சுத்திகலச பூஜை, சுதர்சன ஹோமம், கோபூஜை, தீபாராதனை, பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியமும் 6 மணிக்கு திருமுறை பாராயணமும், இரவு 7.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், தீபாராதனை, 8 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது. 8.30 மணிக்கு கும்ப அலங்காரம், காப்புகட்டுதல், யாகசாலை பூஜைகள் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு சிற்பக்கலை கிரியைகள் ஆரம்பமாகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் சிலைகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சிலைகளுக்கு கண் திறப்பு போன்றவை நடக்கிறது. 6.30 மணிக்கு மங்கள இசையும், 7.30 மணிக்கு திருமுறை பாராயணமும், அபிஷேகமும், 11.30 மணிக்கு பூர்வாங்க பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திரு முறை பாராயணமும் 5.30 மணிக்கு 4-வது கால யாக சாலை பூஜை, ஜெபம் அக்னி காரியம், மூல மந்திரஹோமம் போன்றவைகள் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு சாந்தி கலச பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. 9.30 மணிக்கு அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments