குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின்பேரில் தென் மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா அறிவுறுத்தல்படி குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு குறித்தும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.