Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல்: பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி

கருங்கல்: பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி

0

கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் யுவானிஸ் மனைவி நளின குமாரி (58). இவரது சகோதரர் ரதீஷ் (42) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் சகோதரி நளினகுமாரியின் 23 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரதீஷ் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் பத்து பவுன் நகைகள் என மொத்தம் 32 பவுன் நகைகள் வாங்கி சென்றுள்ளனர். தற்போது நகைகளை திரும்பி கேட்ட பின் திரும்பி தர முடியாது என்று கூறி விட்டனர்.

இது குறித்து நளினகுமாரி கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இது சம்பந்தமாக விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இதற்கிடையில் இரணியல் நீதிமன்றத்தில் நளினகுமாரி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பெயரில் தற்போது ரதீஷ் மற்றும் அவரது மனைவி ரமலா ராணி ஆகியோர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version