கர்நாடகாவில் மே மாதம் 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 41 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.