Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம்

உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு மே 17-ல் சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆலயம் 5 ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் 1929-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி அன்றைய பங்குத்தந்தை இக்னேசியஸ்மரியா முன்னிலையில் கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டு காரங்காடு பங்கின் கிளை பங்காக அறிவிக்கப்பட்டது. 1930-ல் கோட்டாறு மறைமாவட்டம் உதயமானது. புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த இரண்டு சகோதரிகளால் 1931-ம் ஆண்டு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. 1944 நவம்பர் 5-ம் நாள் கண்டன்விளை தனிப்பங்கானது.

இந்த நிலையில் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்தில் 100-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம் ரூ.25 லட்சம் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பங்குப்பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்குமக்கள் முன்னிலையில், பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் அடிக்கல் நாட்டினார். குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 100-வது ஆண்டு விழாவை 2 ஆண்டுகள் கோலாகலமாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை பங்குபேரவை மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments