கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காமராஜர் மணி மண்டபம் உள்ளது. இங்கு காமராஜரின் மார்பளவு வெண்கலச் சிலையும், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அபூர்வ புகைப்பட கண்காட்சிகளும் இடம் பெற்று உள்ளது. இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடல் உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதிலமடைந்து, வெடிப்பு விழுந்து காணப்படுகிறது.
அதைத்தொடர்ந்து காமராஜர் மணி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு மூலம் காமராஜர் மணிமண்டபம் ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணியாக மணி மண்டபத்தின் வெளிப்புறப் பகுதியில் மூங்கில் கம்புகளினால் சாரம் அமைக்கப்பட்டு சிதிலமடைந்துள்ள பகுதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.