சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொடிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்தது. கொத்து கொத்தாக மனித உயிர்கள் பறிபோகின. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. கொரோனாவின் கோர பிடியில் பலர் சிக்கினார்கள். உயிர் பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. முக கவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவு சில மாதங்கள் அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழப்பு, வாழ்வாதார இழப்பு போன்ற சங்கடமான சூழ்நிலையை மக்கள் எதிர்கொண்டனர். நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.