இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 56.2 ஓவர்களில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டும், ஜாக்லீச் 3 விக்கெட்டும், மேத்யூ போட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு ஜாக் கிராவ்லி-பென் டக்கெட் ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். கிராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப் புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 60 ரன்னுடனும், ஒலிபோப் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.