Thursday, September 28, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்அமீரக தமிழ் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

அமீரக தமிழ் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சி துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூல் உள்ள அரங்கில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் TEWA அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறுவர், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி, சமையல், பரதம், ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஓய்வு பெற்ற IAS அதிகாரி மற்றும் திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன், அரவிந்த் குழுமத்தின் உரிமையாளர் பிரபாகர், முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ராஜு மற்றும் பாலு, செய்தியாளர் அஸ்கர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இதில் அமிரக தமிழ் சங்கம், தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments