Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விலை அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விலை அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வரு கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பெரிதும் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவி லில் ஒரு சிகப்பு இளநீர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால் மற்ற பழ வகைகளை மக்கள் பெரிதும் வாங்கி உண்ணு கிறாா்கள். இதனால் கடந்த ஒரு மாதமாகவே பழங்கள் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் சீசன் இல்லாததால் அவற்றின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

அன்னாசி பழம், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை ரூ.10 வரை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் நாகர்கோவி லில் நேற்று ஒரு கிலோ திராட்சை-ரூ.70, அன்னாசி பழம்-ரூ.60, கொய்யா-ரூ.80, முலாம்பழம்-ரூ.45, ஆப்பிள்-ரூ.200, ஆரஞ்சு-ரூ.140 என்ற அடிப்படையில் வியாபாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலம் என்பதால் குமரி மாவட்டத்தில் தற்போது தித்திப்பான மாம்பழம் சீசன் களை கட்டியுள்ளது. பொதுவாகவே குமரி மாவட்டத்தில் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கும். சப்போட்டா, மாம்பழம் நீலம், கிளிமூக்கு மாம்பழம் ஆகிய மாம்ப ழங்கள் அதிகளவில் விற்ப னைக்காக வருகின்றன.

அதிலும் குமரி மாவட்டத் தில் விளையும் சுவை மிகுந்த மாம்பழமான செங்கவருக்கை மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. கடைகள், மார்க்கெட்டுகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் செங்க வருக்கை மாம்பழம் விற்ப னைக்காக வந்துள்ளது. இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இதே மற்ற மாம்பழங்களான சப்போட்டா-ரூ.70 முதல் ரூ.80 வரை, நீலம்-ரூ.60 முதல் ரூ.70 வரை, கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி வியாபாரி களிடம் கேட்ட போது, “குமரி மாவட்டத்தில் தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியதால் வரத்து அதிகரித்து இருக்கிறது. 1½ கிலோ மாம்பழம் ரூ.100 என்ற அடிப்படையில் விற்பனை நடக்கிறது. அதிலும் குமரி மாவட்ட ஸ்பெஷலான செங்கவருக்கை அதிகளவில் வருகிறது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. இந்த வகை மாம்பழம் வரத்து குறை வாக இருந்தால் ரூ.200-க்கு விற்பனை ஆகும். தற்போது வரத்து அதிகமாக உள்ள தால் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறையும்” என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments