Thursday, September 28, 2023
No menu items!
HomeUncategorizedகன்னியாகுமரியில் வள்ளங்களில் பிடிக்கப்படும் உயர்ரக மீன்களுக்கு கடும் கிராக்கி

கன்னியாகுமரியில் வள்ளங்களில் பிடிக்கப்படும் உயர்ரக மீன்களுக்கு கடும் கிராக்கி

கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க த்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தே தி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இரு க்கும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த தடை காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுப ட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கட லுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன.

இதற்கிடையில் அந்த விசைப்படகுகளுக்கு இணையாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் நாட்டு படகுகளிலும் ஏராளமான உயரக மீன்களும் ஆழ்கடலில் இருந்து பிடித்துக்கொண்டு வரப்படுகின்றன. தற்போது கன்னியகுமரி அருகே உள்ள சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவ த்துறை, கீழமணக்குடி, மண க்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் வஞ்சிரம், விளமீன், பாறை, வாவல் போன்ற உயர்ரக மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு பிடிக்கப்படும் உயர்ரக மீன்களை ஏலம் எடுப்பதற்காக கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளில் வெளியூர் மீன் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மீன்களின் விலையும் “கிடுகிடு” வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

கன்னியாகுமரி கடற்க ரையில் மீன்கள் வந்து இறங்கும் தளத்தில் உள்ள மீன் சந்தையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். அதுமட்டுமின்றி மாலையிலும் இந்த மீன்சந்தையில் மீன்கள் வந்து குவிந்தன. மீன் வரத்து அதிகமாக இருந்த பிறகும் நேற்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. 700 ரூபாய் இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1000 ரூபாய்க்கும், 250 ரூபாய் விலைபோன பாரை மீன் கிலோ 350 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற விளமீன் கிலோ 400 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஊலா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், 250 ரூபாய் இருந்த சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையானது. மீன்பிடி தடை காலம் முடிந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்ற பிறகும் வள்ளம் மற்றும் நாட்டுப் படகுகளில் பிடித்து கொண்டு வரப்படும் மீன்கள் தூண்டில் மூலம் பிடித்துக்கொண்டு வரப்படுவதால் இந்த உயர்ரக மீன்களுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. எனவே தான் மீன்களின் விலையும் சற்று உயர்வாகவே காணப்ப டுகிறது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments