Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கன்னியாகுமரியில் கடல் திடீர் என்று உள்வாங்கியதால் கடலில் மூழ்கி இருந்த சிவலிங்க சிலை வெளியே தெரிந்தது

கன்னியாகுமரியில் கடல் திடீர் என்று உள்வாங்கியதால் கடலில் மூழ்கி இருந்த சிவலிங்க சிலை வெளியே தெரிந்தது

கன்னியாகுமரியில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் திகழ்ந்து வருகின்றன. அந்த அடிப்படையில் நாளை சர்வ மகாளய அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் நேற்று மாலையில் இருந்து கடலில் “திடீர்”என்று மாற்றம் ஏற்பட்டது. அப்போது கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் “திடீர்” என்று உள் வாங்கி காணப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதில் பாறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலையும் வெளியே தெரிந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து அந்த சிவலிங்க சிலையை பார்க்க கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடலுக்குள் மூழ்கி இருந்த சிவலிங்க சிலைவெளியே தெரிந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதைப்பார்த்த பக்தர்கள் நேற்று பிரதோஷம் என்பதால் அந்த சிவலிங்க சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள். அந்த சிவலிங்க சிலைக்கு நல்லெண்ணெய், அரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, புனித நீர் மற்றும் கடல் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள். அதன் பிறகு அந்த சிவலிங்க சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்கார தீபாரதனை காட்டினார்கள். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சிவலிங்க சிலையை வணங்கிவழிபட்டனர். சிலர் கடலில்இருந்தஅந்த சிவலிங்க சிலையை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments