இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன், சமூக வலைத்தளத்தில் சீமான் இளையராஜாவை பற்றி பேசும் பொழுது பார்த்திபனை குறிப்பிட்டு பேசியிருந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அம்மேடையில் நானில்லை, ஆனால் பெயர் பெற்றேன். காரணம் ஒரு மேதமையை என் பேதமையில் மிக எளிமையாக but அதை விட பொருத்தமாக யாரும் பாராட்டிவிட முடியாத வார்த்தைகளில் நான் செதுக்கியதை ‘தமிழ் பேச்சின் சீமான்’ பிரயோகிக்கும் போது புல்லரித்தது என்று பதிவிட்டுள்ளார்.