தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் பல்வேறு புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நகரின் முக்கிய இடங்களில் ஏசி வசதியுடன் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு ஆவின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அங்கேயே அமர்ந்து சாப்பிடவும் டேபிள், மேஜை, சோபா போட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இப்போது சென்னையில் முக்கிய ஆவின் பாலகங்களில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ‘கேக்’ வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் வாங்கினால் அந்த வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளிக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ‘கேக்’ வாங்கி அதே வளாகத்தில் பிறந்தநாளை நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடலாம் என அறிவித்துள்ளனர்.