Thursday, September 28, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தமிழகத்தில் 30-ந்தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தமிழகத்தில் 30-ந்தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும், 21 இடங்களில் உள்ள பார்டர் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், மணல், சவுடு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தலைவர் பி.கோபால் நாயுடு, அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.யுவராஜ், நிர்வாகிகள் அரவிந்த் அப்பாஜி, சுந்தரராஜன், வேலு, செந்தில்குமார், சுப்பு, வி.ஆறுமுகம், என்.முருகேசன், வி.பி. செல்வ ராஜா, கே.சின்னுசாமி, டி.சுப்பிரமணி, நாராயணன், ஜெயக்குமார், எம்.மாது, ராஜேஷ், சாத்தையா, நிஜாத் ரகுமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் துரைலிங்கம், கமலக்கண்ணன், ஜானகி ராமன், மயிலை செல்வம், டி.சேகர், ஏ.மணி, ரெட்டி, ரமேஷ்குமார், குணசேகரன், தரணிபதி, செல்வகுமார், எம்.சங்கர், பாஸ்கர், ஏகாம் பரம், முருகன், பிரான்சிஸ் சேவியர், பாரதிராஜா, அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான லாரி உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் தனராஜ் ஆகியோர் நிருபர்க ளிடம் கூறுகையில், “லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் லாரிகள் ஓடாது, பிற மாநில லாரிகளும் வராது” என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments