Monday, December 4, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்5 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

5 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 28-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 2,208 ஆக இருந்தது. அதன் பிறகு 5 மாதங்கள் கடந்த நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450, கேரளாவில் 332, குஜராத்தில் 316, டெல்லியில் 214, கர்நாடகாவில் 135, தமிழ்நாட்டில் 105, இமாச்சலபிரதேசத்தில் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 925 பேர். தினசரி பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி 11,903 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 922 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகாவில் ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 3-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,848 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 1,42,497 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments