Tuesday, June 6, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்டிண்டரில் பழக்கம்… ஆசை வார்த்தையை நம்பி ரூ. 14 கோடியை பறிகொடுத்த முதியவர்…!

டிண்டரில் பழக்கம்… ஆசை வார்த்தையை நம்பி ரூ. 14 கோடியை பறிகொடுத்த முதியவர்…!

பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.

டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயதாகிறது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஹாங்காங்கின் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் நபருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பெண் முதலீட்டு புரோக்கருக்கும் டிண்டரில் மேட்ச் ஏற்பட்டதே, இந்த மோசடியின் ஆரம்பப் புள்ளி.

கடந்த பிப்ரவரி மாதம் டிண்டரில் மேட்ச் ஆனதைத் தொடர்ந்து நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டு புரோக்கர் இருவரும் வாட்ஸ்அப்பில் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் டேட்டிங் ஆன்லைனில் ஜோராக நடந்து வந்துள்ளது. டேட்டிங்கை தொடர்ந்து டிண்டரில் அறிமுகமான பெண் ஆலோசனையை கேட்டு மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி வரை பல்வேறு வலைதளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்து இருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் HK 14.2 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி வரை முதலீடு செய்து இருந்தார். இவரின் முதலீடுகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என பெண் வலியுறுத்தி வந்துள்ளார். பெண் கூறியப்படி தனக்கு லாபம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடினார். அப்போது காவல் துறையினர் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் அறிந்து கொள்கிறார்.

காவல் துறையினர், முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைதளங்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் போலி வலைதளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

முதலீட்டு ஆலோசகர் பின்னணி குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும். அதிக லாபம் கொடுப்பதாக கூறுவோரிடம், அதிக கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு கூறுவோர் நிச்சயம் ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி விவரங்களை கேட்கும் பட்சத்தில், அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். நேரடியாக சந்திக்காத யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம். நேரில் சந்திப்பதை பல்வேறு காரணங்களை கூறி தவிர்ப்போரிடம் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments