தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இயக்கும் மிகப் பழமையான பேருந்துகளுக்குப் பதில் 1000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத்துறைக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதியில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும் புதிதாக வாங்கப்பட உள்ளன.