Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்தங்கத்தால் ஆன சிவன் சிலை திருவட்டார் கோவிலுக்கு கொண்டு வரப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

தங்கத்தால் ஆன சிவன் சிலை திருவட்டார் கோவிலுக்கு கொண்டு வரப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவட்டார் ஆதிகேசவ சேவா டிரஸ்ட் செயலாளர் தங்கப்பன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குரிய நகைகள், சிலைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை கோவிலில் பூஜைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமான ஆபரணங்கள், மரகதங்கள், கும்ப கலசங்கள், பஞ்சலோக விக்கிரகங்கள் அனைத்தையும் கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி முன்னிலையில் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் உள்ள கருவூலத்தில் ஆய்வு செய்து மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கருவூலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டதில் சுமார் 40 வருடங்களுக்கு முன் வரை ஆதிகேசவ பெருமாளின் பாத பகுதியில் பூஜையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தங்கத்தினால் ஆன சுமார் 8 கிலோ 900 கிராம் எடையுள்ள சிவன் சிலை மீட்டு எடுக்கப்பட்டது. தங்க சிலை மற்றும் வட்ட வடிவ பீடத்தின் மச்சத்தை கணக்கிட்ட நகை மதிப்பீட்டு வல்லுனர், பரிசோதனை செய்ததில் இவ்விரு இனங்களும் தங்கத்தால் ஆனது எனவும், மிகவும் பழமை வாய்ந்தது எனவும் சான்று அளித்தார். பின்னர் தங்க சிலை, பீடம் ஆகியன கருவூலத்தில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டப்பட்டு லாக்கர் சாவிகள் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சுமார் 40 வருடங்களுக்கு மேல் பூஜையின்றி கருவூலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ 900 கிராம் தங்க சிவன் சிலையை உடனே பரிகார பூஜைகள் செய்து ஆதிகேசவ பெருமாளிடம் முன்பு இருந்தது போன்று பிரதிஷ்டை செய்து தொன்று தொட்டு நடைபெற்று வந்த வழிபாட்டு முறையை மீண்டும் தொடர்ந்து நடத்த அறநிலையத்துறை முன்வரவேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments