நாகர்கோவிலில் மகளிர் தினத்தையொட்டி அரசு பணியாளர்களுக்கு கோலப்போட்டி நடந்தது.
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோலப்போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தொடங்கி வைத்தார். இதில் வருவாய் துறை, பேரூராட்சி, வேளாண்மை, குழந்தைகள் நல பாதுகாப்பு, புள்ளியல், சமூகநல பாதுகாப்பு உள்பட பல்வேறு அரசு துறைகள் சார்ந்த பணியாளர்கள் 17 குழுக்களான பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரங்கோலி, மயில் உள்ளிட்ட பல வண்ணக் கோலங்கள் இடம்பெற்று இருந்தன. போட்டிகளில் வெற்றி பெறும் பணியாளர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.