குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்சல் நேசமணியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம். பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், துணை மேயர் மேரி பிரின்சிலதா, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், கவுன்சிலர் நவீன்கு மார், அனுஷாபிரைட், மேரி ஜெனட்விஜிலா, வக்கீல் மதியழகன் உட்பட பலர் நிகழச்சியில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு, மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், மாணவரணி செயலாளர் மனோகரன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன், அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, முன்னாள் நகர செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர். நேசமணி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலை மையில் மாலை அணி விக்கப்பட்டது. நிர்வாகிகள் தங்கவேல், பிரேம், யூஜின், மரிய ராஜன், சாமி நாடார், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.