மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை மீனவர் கிராமத்தில் புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் உள்ள சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் சொரூபத்தில் இடது பக்க தோள்பட்டை பகுதியில் ரத்தம் வடிந்ததை நேற்று பலரும் பார்த்துள்ளனர். மாலையில், ரத்தம் ஏசு சொரூபத்தின் வயிற்றுப் பகுதி வரை வடிந்து உறைந்து நின்றதாக தெரிகிறது. இந்த தகவலறிந்த பொது மக்கள் பெரியவிளை ஆலயத்திற்குச் சென்று பார்த்து பரவசமடைந்தனர். இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஆலயத்திற்கு வந்து ஏசு சொரூபத்தில் ரத்தம் வடிந்ததை பார்த்துச் சென்றனர். இது குறித்து பங்குத் தந்தை கூறுகையில், ஏசு நாதர் சொரூபத்தில் வடிந்த ரத்தம் குறித்து உறுதி செய்யப்படவில்லை. உறுதி செய்ய 3 நாட்கள் ஆகலாம். அதன்பின்பே இதுபற்றி ஆதாரப்பூர்வமாக கூற முடியும் என்றார்.