கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இயங்கி வரும் குலசேகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் உர கிட்டங்கி கட்டி தரும்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்து கிட்டங்கியின் தேவையை அறிந்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதையொட்டி, கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார். கூட்டுறவு வங்கித் தலைவர் ஜே. மோகன்தாஸ் தலைமை வகித்தார். செயலர் நந்தினி முன்னிலை வகித்தார். பின்பு விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் விஜய் வசந்த் குறைகளை கேட்டறிந்தார்.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், வட்டார தலைவர் வினுட்ராய், முன்னாள் வட்டார தலைவர் தலைவர் காஸ்ட்டன் கிளீட்டஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரெத்தினகுமார், ஆரோக்கியராஜ், குலசேகரம் பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூராட்சித் தலைவர் பொன் ரவி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பினிஷ், செயலாளர் ஜெயசிங், காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் எஸ். எபனேசர், விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளர் கே. செல்வராஜ், மாவட்ட திமுக முன்னாள் பொருளாளர் கே. மணி மற்றும் வார்டு உறுப்பினர்களும், வங்கி பணியாளர்களும் பங்கேற்றனர். நிறைவாக கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.