Wednesday, December 6, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்தோவாளை கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்க அதிகாரிகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்

தோவாளை கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்க அதிகாரிகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்

ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், கேசவன் புதூர், அரும நல்லூர், தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, இறச்சகுளம், திட்டுவிளை உள்ளிட்ட இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்களை விவசாயிகள் தோவாளை கொள்முதல் நிலையம் கொண்டு வந்து கொடுப்பார்கள். சமீப காலமாக அங்கு நெல்களை கொண்டு வந்தால், அதிகாரிகள் நெல்கள் ஈரமாக இருப்பதால் எடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2265 வழங்கப்படும். ஆனால் தனியார் ரைஸ்மிலில் 87 கிலோவுக்கு ரூ. 1750 கிடைக்கும். இதில் வண்டி வாடகை செலவுகள் அதிகம். ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள விவசாயி களிடம் நெல்களை கொள்மு]தல் செய்ய கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments