Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தேங்காய் சிரட்டையில் உருவான கலைநயம் மிக்க பொருட்கள் கண்காட்சி

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தேங்காய் சிரட்டையில் உருவான கலைநயம் மிக்க பொருட்கள் கண்காட்சி

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் மே மாத சிறப்பு காட்சிப் பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும்பொருட் கள் உள்ளன. ஒவ்வொரு பொருட்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருட்களின் முக்கியத்து வத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருட் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும்பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அந்த பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டு இருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்த பொருட் கள் பொதுமக்களின் பார் வைக்காக அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறாக கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச்செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி. அதன்படி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில் தேங்காய் சிரட்டையில் தயாரிக்கப்பட்ட அழகிய கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

நமது முன்னோர்கள் இயற்கையோடு இசைந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர். தேங்காய் சிரட்டைகள் கழிவு பொருளாக கருதப் பட்டாலும் கறி தயாரிப்பது தவிர வேறு நன்மையான பயன்பாடுகளும் உள்ளன. உபயோகமற்றதாக கருதப்படும் தேங்காய் சிரட்டையில் இருந்து ஏராளமான அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் சிரட்டையில் கைவினை மற்றும் அலங்கார பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. தேங்காய் சிரட்டைகள் சமையலுக்கான எரிபொரு ளாக பயன்பட்டாலும் அவற்றை கொண்டு கிண்ணங்கள், கரண்டிகள், அடிப்படை ஆபரணங்கள் ஆகியவை தயாரிக்கப்படு கின்றன. தேங்காய் சிரட்டை மற்றும் தென்னை மர செதுக்கு சிற்பக்கலை கேரளத்தில் பிரபலமாக உள்ளது. நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இந்த கண் காட்சியின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் சிவசத்தியவள்ளி தெரிவித்தார். கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments