Tuesday, October 3, 2023
No menu items!
Homeசினிமா செய்திகள்எமனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன்.. மாவீரன் டிரைலர் ரிலீஸ்

எமனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன்.. மாவீரன் டிரைலர் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments