Sunday, September 24, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதித்தேர்வு நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதித்தேர்வு நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 546 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணிவரை நடைபெறுகிறது. இத்தேர்வை 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனர். நாடுமுழுவதும் நீட் தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு (ஹால்டிக்கெட்) இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதக் கூடிய நகரங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணைய தளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப் பட்ட நுழைவு சீட்டுடன் ஆதார் கார்டு, பாஸ்வேர்டு, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் எண் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழி களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப் புரம், ஊட்டி உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments