Thursday, September 28, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்ஜெயலலிதா பாணியில் தொடர் போராட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்

ஜெயலலிதா பாணியில் தொடர் போராட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு பல அணிகளாக அ.தி.மு.க. செயல்பட்டது. பின்பு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை தலைமையுடன் செயல்பட தொடங்கியது. இது கட்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டு பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றனர். கோர்ட்டு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்தது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆலோசனை கூட்டம் நடத்தி உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தினார். அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட செயலாளர்களை அடிக்கடி அவரே தொடர்பு கொண்டு எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். ஓ.பி.எஸ். சமீபத்தில் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். சசிகலாவை விரைவில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து கட்சியினரிடம் கழக பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதிக உறுப்பினர் சேர்க்கையால் நமது அணியை பலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலியை கண்டித்தும் முறைகேடுகளை விசாரணை செய்யக் கோரியும் அவர்கள் மாளிகை நோக்கி பேரணி நடத்தி கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. அடுத்த கட்டமாக பொதுமக்கள் அடிப்படை பிரச்சினையை உடனடியாக ஆங்காங்கே பிரமாண்ட போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தது. தி.மு.க.வுக்கு எதிரி அ.தி.மு.க.தான் என்பதை நிரூபிக்க தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக சில மாவட்ட செயாளர்கள் செயல்படுவதாக புகார் வருவதை தொடர்ந்து அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பாணியில் தவறு செய்வோர் உடனடியான தண்டிக்கப்படுவதும் தி.மு.க. எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதும் தீவிரம் அடைவதாக தெரிகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments