Monday, June 5, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்துவாரகாபதி கடற்கரையில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணி

துவாரகாபதி கடற்கரையில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணி

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் துவாரகாபதி கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியினையும், கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- குமரி மாவட்டம், துவாரகாபதி கடற்கரையில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் வனத்துறை யினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை மணலில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து, முட்டைகள் பொரிப்பதற்கு கொண்டு செல்லப்படும். அங்கு ஆமை முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை தேதி வாரியாக பாதுகாப்பாக வைத்து, முட்டைகள் பொரிக்க வசதிகள் உருவாக்கப்பட் டுள்ளது. கடந்த வருடம் இங்கு 5993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் 3708 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

இந்த வருடம் 9491 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் தற்போது வரை 1673 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விடுவதால், மீன்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்வதோடு, கடல் நீரை தூய்மைப்ப டுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும். இன்றைய தினம் சேகரித்து வைக்கப்பட்ட ஆமை முட்டைகளில் பொரித்து வெளி வந்த 120 ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, வனத்துறையினரால் வெளியிடப்பட்ட கையேட்டினை கலெக்டர் ஸ்ரீதர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கியதோடு, வனத்துறையினர் மற்றும் மாணவ, மாணவி கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆமை மணற் சிற்பத்தினை பார்வையிட்டார். தொடர்ந்து, கலெக்டர் ஸ்ரீதர் மாணவ, மாணவி களுடன் கடற்கரையில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி கலெக்டர் (பயிற்சி) சுகாஷ் காடே, (கேரள மாநிலம்) வனச்சர கர்கள், மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments