சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.’மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில் படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்களை மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், மாவீரன் படக்குழு கமல் மற்றும் ரஜினியை படத்தில் பின்னணி குரல் கொடுக்க அணுகியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் பட பணிகளில் பிசியாக இருப்பதால் இதில் இணைய முடியவில்லை. இருந்தாலும் படத்தில் ஒரு முக்கிய பிரபலம் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது உங்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்றார்.