விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் இதே கதைக்களத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.